மேலும் 43 பேர் குணமடைந்தனர் – 520 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 43 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இதுவரை அடையாளம் காணப்பட்ட 935 பேரில் 177 கடற்படையினரும் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று உறுதியானவர்களில் 406 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை