தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாவிட்டாலும் இயல்பு நிலைக்கு திரும்புவோம்: ட்ரம்ப் பேச்சு!
தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அமெரிக்கர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை தோட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை இந்தாண்டு இறுதிக்குள் கண்டுபிடிப்பதை குறிக்கோளாக வைத்துள்ளோம்.
14 முக்கிய ஆராய்ச்சியளர்களோடு இந்தத் தடுப்பூசி கண்டறியும் திட்டம் தொடங்கப்படும். ‘ஒப்ரேஷன் வோர்ப் ஸ்பீட்’ என்பது இரண்டாம் உலகப்போரின் போது, உலகின் முதல் அணுஆயுதங்களை உருவாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் திட்டத்தை குறிப்பதாகும்.
மிகவும் பெரிதாக மற்றும் விரைவாக அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய அறிவியல், தொழில்துறை மற்றும் தளவாட முயற்சி இது.
தடுப்பூசியை சார்ந்துதான் அனைத்தும் இருக்கிறது என்று மக்கள் நினைக்க வேண்டாம். தடுப்பூசி இருந்தாலும், இல்லையென்றாலும் நாம் திரும்பி இயல்பு நிலைக்கு வருவோம். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்போகின்றன்’ என கூறினார்.
கருத்துக்களேதுமில்லை