ஓட்டவா நகரில் பிரதான தமிழ்த்தேசிய செயற்பாட்டளராக இருந்த சுரேஸ் தம்பிராஜா வாகன விபத்தில் அகாலமரணத்தை தழுவினார்…

2009 ஆண்டு வரை மிக நீண்ட காலமாக ஓட்டவா நகரில் பிரதான தமிழ்த்தேசிய செயற்பாட்டளராக இருந்த ஓட்டவா சுரேஸ் என்று செல்லமாக அழைக்கபடும் சுரேஸ் தம்பிராஜா அவர்கள் நேற்றய நாள் மாலை பொழுதில் தொடர் வாகன விபத்தொன்றில் அகாலமரணத்தை தழுவினார்.

அன்றய காலகட்டத்தில் ஓட்டவா நகரில் உள்ள மக்களின் தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்திற்க்காக முன்னெடுத்த மற்றும் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர், பல தொழில் நுட்ப ஆற்றல்களையும் கொண்டவர் ஆவார்.

சுரேஸ் தம்பிராஜா அவருக்கு ஆழ்ந்த கண்ணீர் இரங்கலை தெரிவிப்பதுடன் அவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எமது தமிழ் சி என் என் (Tamilcnn) இணையக்குழு  கண்ணீர் இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.