நீதிமன்றத் தீர்ப்பு எதிரணியின் வாய்களை அடக்கச் செய்யும்! – இப்படி அரசு நம்பிக்கை…
“நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் பொதுத்தேர்தல் திகதி ஆகியவற்றுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின்போது உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிரணிகளின் வாய்களை அடக்கச் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்.”
– இவ்வாறு அரச பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராகவும், ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானத்தமைக்கு எதிராகவும் எதிரணிகளின் பங்களிப்புடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நடுநிலையுடன் நடைபெறும் என்றே நாம் நம்புகின்றோம்.
ஜனாதிபதியினதும் தேர்தல்கள் ஆணைக்குழுவினதும் முடிவுகளை ஆதரித்தே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்றும் நாம் நம்புகின்றோம்.
இந்தத் தீர்ப்பு எதிரணிகளின் வாய்களை அடக்கச் செய்யும் என்றும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிவகுக்கும் என்றும் நாம் நம்புகின்றோம்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை