வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து மேலும் 31 பேர் விடுவிப்பு

வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 31 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

நாவலப்பிட்டிய, கண்டி, மொனராகலை, செவினகலை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 400இற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கோரோனா தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

அதற்கமைய வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த முகாமிற்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்களென 190 பேர் பேருந்துகளின் மூலம் அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அழைத்துசெல்லப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த பின்னர், தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.