இரட்டிப்பாகும் பொதுத் தேர்தலுக்கான செலவு…!

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுடன் பொதுத் தேர்தலை நடத்துவது என்றால் சுமார் 14 பில்லியன் ரூபாய் வரை செலவு ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கணித்துள்ளது.

இருப்பினும் இது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் தேர்தல் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் இதுவரை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களைப் பெறவில்லை, ஆனால் அதிகளவிலான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக செலவுகள் குறைந்தது இரு மடங்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது” என கூறினார்.

கடந்த பெப்ரவரியில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக தேர்தல் செயலகம் மதிப்பிடப்பட்ட செலவு 5 மில்லியன் ரூபாய் ஆகும். எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்தலுக்கான செலவு 7 பில்லியனை தாண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சமூக இடைவெளி போன்ற வழிகாட்டுதல்களைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் இத்தகைய அதிகரிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார வழிகாட்டுதல்கள் காரணமாக செலவுகள் தவிர்க்க முடியாமல் அதிகரிக்கக்கூடும் என்றும் புதிய வழிமுறைகளை ஆணைக்குழு பின்பற்ற வேண்தியா கடப்பாட்டில் உள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.