38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு திரும்பவுள்ளனர் – வெளிவிவகார அமைச்சு

எதிர்வரும் காலங்களில் 143 நாடுகளைச் சேர்ந்த சுமார் 38,983 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த குழாமில் 27,854 பணியாளர்களும் 3,078 மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 4,400 பேர் குறுகிய கால விசாக்களின் மூலம் வெளிநாடுகளில் தங்கியுள்ளதோடு, 3,527 பேர் புலம்பெயரந்து வாழ்பவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிற இரட்டைக் குடியுரிமை அல்லது வேறு காரணங்களினால் தங்கியுள்ள 484 பேர் நாடு திரும்பவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.