முள்ளிவாய்க்கால் சென்ற விக்னேஸ்வரன் திருப்பி அனுப்பப்பட்டார்!

முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர், ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காக்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் நிளைவேந்தலை அனுஸ்டிக்க இன்று(திங்கட்கிழமை) காலை 6.30 மணியளவில், வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் வெவ்வேறு வாகனங்களில், அங்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

இதன்போது, கேரதீவில் சோதனைச் சாவடியில் வைத்து பொலிஸாரால் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் அங்கு காக்க வைக்கப்பட்ட பின்னர், ‘மேலிடத்து உத்தரவு’ எனத் தெரிவித்த சோதனைச் சாவடிக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி இவர்களை திருப்பி அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்தக் காரணம் கொண்டும் முள்ளிவாய்க்கால் செல்ல அனுமதிக்க முடியாது எனவும் பொலிஸார் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.