இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் மலர் தூவி அஞ்சலி!
இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று(திங்கட்கிழமை) காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தமிழர் தாயகம் முழுவதும் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை