இனப்படுகொலை நாளில் எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம் – பீற்றர் இளஞ்செழியன்.
எம் உறவுகளை இறுதி போரில் பௌத்த சிங்கள பேரினவதிகள் கொன்று குவித்தது இனப்படுகொலையே தவிர வேறு ஏதும் இல்லை என இலங்கைத் தமிழ் அரசுக்கு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்தேறிய கோரத்தாண்டவம் முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறியது இனப்படுகொலை மட்டுமே தவிர வேறு ஏதும் அல்ல. சம்பவங்கள் இன்றும் எம் மனக்கண்முன்னே நிஜமாக காட்சி தருகிறது.
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பதினொராவது ஆண்டு நினைவு தினம் 2020 மே 18 கட்சி பேதம் இன்றி “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின்” ஒழுங்கு படுத்தலில் அனுசரிக்கப்படுகிறது.
இலங்கையில் 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மற்றும் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நீடித்து வந்த உள்நாட்டுப் போர் உலக நாடுகளின் உதவியுடன் 11ம் ஆண்டுகளுக்கு முன்பாக 2009ம் மே 18 ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளுடன் நிறைவடைந்தது.
இலங்கை இறுதிப் போரின் போது பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள் மேல் மேற்கொண்ட இன அழிப்புக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகளிகள் மேற்கொண்ட ஆயுதம் போராட்டத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் உலக நாடுகளின் உதவியுடன் எமது உறவுகளை சிதறிபலியானார்கள்.
கைக்குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள்,பெரியவர்,வயோதிபர் என வகை தொகை இன்றி இலங்கை இராணுவத்தின் கோரத்தாண்டவத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆகுதியான அந்த நெஞ்சம் மறக்காத நீங்காத நினைவை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது.
உயிர்நீத்த உறவுகளுக்கு பதினொராவது ஆண்டு வணக்கத்தை எல்லோரும் ஒன்றாய் கூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நிலை தற்போதைய பௌத்த சிங்கள பேரினவாதிகளின் அரசினாலும் மற்றும் இந்த வருடம் கொரோனா வைரஷ் நோய் தாக்கத்தால் முடியாமல் போகலாம்.
இருந்தபோதும் அதையும் தாண்டி முள்ளிவாய்க்கால் மண்ணில் 2020 மே 18 காலை 10.30 மணிக்கு எல்லோரும் ஒன்றாய் கூடி சமூக இடைவெளிகளை கடைபிடித்து நினைவு தீபம் ஏற்றி வழிபடுவது எமது கடமையாகும்.
தமிழர் மேல் பௌத்த சிங்கள பேரினவதிகள் மேற்கொண்டது இனப்படுகொலை என்பதை உலகுக்கு பறை சாற்றுவதும் எமது கடமை மட்டுமல்லாது இனப்படுகொலைக்கு நீதியான தீர்வு வேண்டும் என்பதையும் உலக நாடுகளுக்கு உரக்க சொல்வோம். இவ் நிகழ்வில் கலந்து கொல்லமுடியதவர்கள் இல்லங்கள் தோறும் மே18, விளக்கேற்றி உயிர்நீத்த உறவுகளை நினைத்து வணக்கம் செலுத்தி வழிபடுவோம்.
இனப்படுகொலைக்கான சர்வதேச நீதிவேண்டும் என்பதை மீண்டும் அனைத்துலகத்திற்கும் முள்ளிவாய்க்கால் பதனோராம் ஆண்டு நினைவுநாளில் நாம் எல்லோரும் மீண்டும் வலியுறுத்துவோம்.
எமதுமண்ணின் விடிவுக்காக எமது மண்ணில் உயிர்நீத்த எமது உறவுகள் எந்த நோக்கத்திற்காக உயிர்நீத்தார்களோ அந்த உயரிய நோக்கம் நிறைவேற தமிழ்தேசிய பற்றுறுதியுடன் எம்மை நாமே பலப்படுத்தி ஒற்றுமையாக செயல்பட்டு எமது இலட்சியத்தை வென்றெடுக்க முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு நாளில் உறுதி எடுப்போம், தொடர்ந்தும் உழைப்போம் என தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை