இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்தது
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாகவும் 569 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை