நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இல்லை – பாதுகாப்பு அமைச்சு
நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு செயலாளர் அறிக்கையொன்றினையும் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் ஓரிடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக குறித்த உளவுத்துறை பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த உண்மைக்கு புறம்பான செய்திகளால் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
கருத்துக்களேதுமில்லை