ஆய்வு ஒன்றினை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

அரச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களையும் கற்பிப்பதற்கான பாடங்களையும் கண்டறிய ஆய்வு ஒன்றை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்காக https//moe.gov.lk இல் “Teacher Survey Form” அல்லது https://nemis.moe.gov.lk என்ற இணைய முகவரிக்குள் பிரவேசித்து கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வினா கொத்தை நிறைவு செய்ய வேண்டும் என கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.