கடற்படை சிப்பாய்களில் 585 பேருக்கு கொரோனா…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 585 பேர் கடற்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அவர்களில் 221 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், 364 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெறும் கடற்படையினரில் 156 பேர் வெலிசறையிலுள்ள கடற்படை பொது மருத்துவமனையிலும், 208 பேர் ஏனைய மருத்துவமனைகளிலும் உள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை