கொழும்பில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் சாவு!
கொழும்பு, மாளிகாவத்தையில் இன்று நிதி விநியோக செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 6 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் ஒருவரே இந்த நிதி விநியோக செயற்பாட்டில் ஈடுபட்டார் என்றும், இது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது எனவும் மாளிகாவத்தை பொலிஸார் மேலும் கூறினர்.
கருத்துக்களேதுமில்லை