அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீண்டும் ஒரு பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்
ஒரே சூலில் 3 குழந்தைகளை கோமாரி பகுதியை சேர்ந்த பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை(21) நண்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.
வியாழக்கிழமை(21) பிரவச வலி என 28 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காலை அதே பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பின்னர் திருக்கோவில், அக்கரைப்பற்று, வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 குழந்தைகளும் பெறப்பட்டுள்ளதுடன் 3 ஆண் குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த சத்திர சிகிச்சையினை மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டனர்.
இதில் மூன்று ஆண் குழந்தைகளும் தலா1800கிராம் , 2190கிராம், 2240 கிராம், நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை