கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வெள்ளிக்கிழமை) காலை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 53 வயதுடைய வைரவநாதன் சிவராசா மற்றும் 71 வயதுடைய சுப்ரமணியம் துரைவீரசிங்கம் ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை