தேர்தலை நடத்துவது எப்படி? கட்சிகளிடம் ஆலோசனை கேட்கின்றார் தேசப்பிரிய!
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக சுகாதாரப் பிரிவினரோடு கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளமையால் பிரசாரப் பணிகள் கைக்கொள்ளப்பட வேண்டிய முறை குறித்த அரசியல் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய – எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவசர கடிதம் ஒன்றை அவர் அந்தக் கட்சிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் கிடைத்த கையோடு சுகாதாரப் பிரிவினருடன் பேச்சு நடத்தவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அதன் பின்னர் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கவுள்ளார்.
அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் அபிப்பிராயம் – தீர்ப்பு கிடைக்கும் என அவர் நம்புவதாகவும் அறியமுடிந்தது
கருத்துக்களேதுமில்லை