இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணை!
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக சனிக்கிழமைகளில் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கு விசாரணைகளில் ஏற்பட்ட தாமதங்களை தவிர்ப்பதை இதன் நோக்கமாகும்.
இதற்கமைய, எதிர்வரும் 30ம் திகதி சனிக்கிழமை மற்றும் ஜூன் மாதம் 13ம் திகதி சனிக்கிழமை ஆகிய தினங்களில் வழக்கு விசாரணைகளை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மார்ச் மாதம் 23 ம் திகதி முதல் மே மாதம் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விசாரணைக்கு எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை