கடந்த 24 மணித்தியாலங்களில் 515 பேர் கைது!
ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 6 மணி முதல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களிலேயே குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 152 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி பிற்பகல் 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 62 ஆயிரத்து 677 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை