பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இந்த கலந்துரையாடல்களின் போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்து கொடுக்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கான வெப்பமானி, மாணவர்கள் கை கழுவுதற்கான ஏற்பாடுகள்,மற்றும் திடீரென மாணவர்களுக்கு சுகவீனம் அல்லது உடல் உஷ்னம் அதிகரித்தல் போன்றன ஏற்பட்டால் அந்த மாணவர்களுக்கான முதலுதவியை வழங்குவதற்கான கட்டிலுடன் கூடிய அறை வசதிகள் உள்ளிட்ட மூன்று விடயங்களில் பிரதானமாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருக்கிறது. இவற்றுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை