நோவா ஷ்கோட்டியாவில் காட்டுத் தீ: 1,000க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றம்

கனடாவின் கிழக்கு மாகணமாகிய நோவா ஷ்கோட்டியாவின் போர்ட்டர்ஸ் ஏரிப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறியுள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) மதியம் 12:20 மணியளவில், வெஸ்ட் போர்ட்டர்ஸ் லேக் வீதிக்கு அருகிலுள்ள நோவா ஷ்கோட்டியாவின் போர்ட்டர்ஸ் ஏரியில் நெடுஞ்சாலை 107இல் இருந்து காட்டுத்தீ பிடித்ததை தொடர்ந்து, ஹாலிஃபாக்ஸ் தீயணைப்புக் குழுவினர் அழைக்கப்பட்டனர்.

எனினும், அதிக காற்று போன்ற நிலைமைகளால் தீ வேகமாகப் பரவி, நெடுஞ்சாலையின் 107இன் இருபுறமும் பரவியது. இதற்கிடையில், முழு மாகாணமும் தீ தடைக்கு உட்பட்டுள்ளது. சமீபத்திய வானிலை நிலைமைகளால் இப்பகுதியில் உள்ள காடுகள் முற்றிலுமாக வறண்ட பகுதியாகிவிட்டன என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள், தற்போது நெடுஞ்சாலை 7இல் உள்ள ஏரி எக்கோ சமூக மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.