முகமாலை மனித எச்சங்கள்: இராணுவத் தளபதி விளக்கம்
கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் – எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடையவை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மோதலின்போது இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், இது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, மனித எலும்புக்கூடுகள் – எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நேரில் பார்வையிட்டுள்ளார்.
எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை