யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
யாழ். உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு அந்த வீட்டின் மீது மிளகாய்த் தூள் கரைசலும் விசிறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் எவரும் இல்லாதமையினால் இந்த சம்பவம் தொடர்பாக அயலவர்களால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை