ஒருநாள் மரணங்கள்- 100களில் பிரிட்டன் – 75களில் ஐரோப்பா – 1 லட்சத்தை நெருங்கும் USAயின் மொத்த மரணங்கள்…
பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +118 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் +282 ஆக பதிவாகிய இறப்புகள், இன்று +164ஆல் மீண்டும் குறைந்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 36,793 ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிய தொற்றாளர்கள் +2,405 பேருடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 259,559 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, சுவிற்சலாந்தில் +1 இறப்பும், ஜேர்மனில் +5 இறப்புகளும், சுவீடனில் +6 இறப்புகளும், நெதர்லாந்தில் 11 இறப்புகளும், பிரான்ஸில் +35 இறப்புகளும், பெல்ஜியத்தில் +43 இறப்புகளும், இத்தாலியில் +50 இறப்புகளும், ஸ்பெயினில் +74 இறப்புகளும், ரஷ்யாவில் +153 இறப்புகளும், மறுபுறம் கனடாவில் +69 இறப்புகளும், மெக்ஸிக்கோவில் +190 இறப்புகளும், பிறேசிலில் +278 இறப்பகளும், இந்தியாவில் +156 இறப்புகளும், பதிவாகி உள்ளன.
இதேவேளை, பிரிட்டன் நேரம் 20.20 மணி அளவில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவின் மொத்த இறப்புகள் 99 ஆயிரத்தைக் கடந்து 99,047 ஆக உயர்ந்துள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,677,614 உயர்ந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை