மட்டு. வவுணதீவில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகிபுரம் பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுமார் 8.30 மணியளவில் குறித்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த சந்தேகநபரை கைது செய்ததுடன், துப்பாக்கியை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.