வடகொரிய தலைவர் தலைமையில் இராணுவக் கூட்டம்: மூன்று வாரங்களுக்கு பிறகு பொதுத்தோற்றம்!

அமெரிக்காவுடனான அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நாட்டின் அணுசக்தி திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் குறித்து விவாதிக்க வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஒரு இராணுவக் கூட்டத்தை நடத்தியதாக அரசு ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) தெரிவித்துள்ளது.

ஆளும் தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டம், மூன்று வாரங்களில் கிம்மின் முதல் பொது தோற்றத்தைக் குறிக்கின்றது.

கொரோனா வைரஸ் கவலைகளுக்கு மத்தியில் கடந்த இரண்டு மாதங்களில் அவர் வழக்கத்திற்கு மாறாக குறைந்த எண்ணிக்கையிலான பயணங்களையே மேற்கொண்டுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வடகொரியா தலைநகர் பியாங்காங்கில் நடந்த முக்கிய இராணுவ கூட்டத்தில், வட கொரியாவின் அணு ஆயுதங்களை மேம்படுத்துவது, நாட்டின் ஆயுதப் படைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வைப்பது மற்றும் பிறநாட்டிலிருந்து வரும் அச்சுறுதல்களுக்கு எதிராக தங்கள் நாட்டின் சக்தியை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட கொரிய இராணுவத்தின் தலைவர் கிம் ஜோங் உன், இராணுவத்தின் துணை தலைவர் பாக் ஜோங் சோன், ஆயுத மேம்பாட்டு பொறுப்பில் இருக்கும் அந்நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி பியோங் சோல் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக கே.சி.என்.ஏ ஊடகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.