கொவிட்-19 நெருக்கடியிலிருந்து முக்கிய நிறுவனங்களை மீட்பதற்கான திட்டத்தை வகுக்கும் அரசு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முக்கிய பெரிய நிறுவனங்களை மீட்பதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வகுத்துள்ளது.

இவ்வாறான நிறுவனங்களை சரிவிலிருந்து காப்பாற்ற வழங்கும் நிதி உதவி செயற்திட்டத்திற்கு, ‘Project Birch’ என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தை போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் (Grant Shapps) கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விமானத் துறையின் எதிர்காலம் குறித்து விவாதித்தபோது குறிப்பிட்டிருந்தார்.

இந்த திட்டத்தின் மூலம், இவ்வாறான நிறுவனங்களை மீட்க தயாராக இருப்பதாக பிரித்தானிய அரசு கூறியுள்ளது.

இதன்மூலம் நிறுவனங்களில் இருந்து அரசும் பங்குகளை எடுக்கக்கூடும் என்று பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குறித்த செயற்திட்டம் கடைசி முயற்சியாக மட்டுமே கருதப்படும் என Her Majesty’s தெரிவித்துள்ளது. இதுகுறித்து இதன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

‘இந்த நெருக்கடியை அடைய வணிகங்களுக்கு உதவ நாங்கள் முன்னோடியில்லாத அளவிலான ஆதரவை வழங்கியுள்ளோம். அதையும் தாண்டி பல நிறுவனங்கள் தற்போதுள்ள பங்குதாரர்கள், வங்கி கடன் மற்றும் வணிக நிதி போன்ற நிறுவப்பட்ட சந்தை வழிமுறைகளிலிருந்து ஆதரவைப் பெறுகின்றன’ என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.