இலங்கையில் கொரோனா மரணம் 10 ஆக அதிகரித்தது குவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண்ணே சாவு
குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை இராணுவ முகாமில் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் இன்று அதிகாலை திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.
இதன்பின்னர் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த பெண் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது எனச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை