அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்கவேண்டாம் – அனில் ஜாசிங்க கோரிக்கை

தன்னையும் ஏனைய அரச அதிகாரிகளையும் அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்கவேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டிற்காக சேவையாற்றிய தன்னை போன்ற அரசாங்க ஊழியர்கள் எந்த கட்சியையும் சார்ந்து செயற்பட்டது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரசாங்கங்களாலும் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளதாகவும், ஆனாலும் அவர்களிடமிருந்து விலகி ஓடியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்து செயற்படாத தங்களை போன்ற அதிகாரிகள் பலர் உள்ளனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுமாறும் அனில்ஜசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செயற்பாடுகளை தங்களால் முன்னெடுக்க முடியும் என்றே ஜனாதிபதியின் செயலாளருக்கான தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தான் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.