20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல்; 8,170 பேருக்கு எதிராக அபராதம்
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 65 ஆயிரத்து 930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 18 ஆயிரத்து 614 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நேற்று (திங்கட்கிழமை) காலை 6.00 மணி முதல், இன்று காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1,543 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 445 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு 65 கைது செய்யப்பட்டவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 926 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 8ஆயிரத்து 170 பேருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை