அம்பாறையில் கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரிய நீலாவணை, மருதமுனை, கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல்மட்ட வேறுபாடும் கடல்கொந்தளிப்பு நிலையுமே இதற்கான காரணமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடல் நீரானது கரைவலை தோணிகளை நிறுத்தி வைக்கும் இடங்களைக் காவுகொண்டுள்ளதுடன், மணல் பகுதிகளையும் அதிகமாக உள்ளே இழுப்பதனாலும் தோணிகளைத் தள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கரைவலை இழுவை மீன்கள் பிடிக்கப்படாததன் காரணமாக மீனின் விலையும் இப்பிரதேசங்களில் அதிகரித்துக்காணப்படுகிறது.

கடல் கொந்தளிப்பு இப்பிரதேசங்களிலிருந்து படிப்படியாக அதிகரித்து காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் பிரதேச கரைவலையினையும் பாதிக்கக்கூடிய வாயப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.