டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு..!
இந்தவருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மே 21 வரை மொத்தம் 19 ஆயிரத்து 474 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இம்மாதம் மூன்றாம் வாரத்தின் முடிவில், நாடு முழுவதும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 485 ஆக பதிவாகியுள்ளது. மே முதல் வாரத்தில் 96 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், கடந்த இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
அந்தவகையில் கடந்த மூன்று வாரங்களாக கண்டியில் (86), இரத்தினபுரியில் (84), மட்டக்களப்பில் (50), யாழ்ப்பாணத்தில் (45), கொழும்பில் (40), மற்றும் கேகாலையில் (40) என குறித்த பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை வீழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கணித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை