கொரோனா தொற்றிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 17 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று முழுமையாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 41 பேர் நேற்று இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,182 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு 460 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 79 பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் இலங்கையில் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை