வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ளவர்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: சஜித் கோரிக்கை
சீசெல்ஸில் இருந்து நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் செயற்பாட்டைக் காட்டிலும் வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள் தொடர்பாகவும் அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளில் உள்ள பல இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருமாறு அவர்கள் பலமுறை அரசாங்கத்திடம் கேட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
எனினும் அந்த விடயத்தில் அரசாங்கம் கவனத்தைச் செலுத்துவதாக தெரிவில்லை என தெரிவித்த அவர் சீசெல்ஸில் இருந்து நோயாளர்களை இலங்கைக்கு அழைத்து சிகிச்சையளிப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமைக் கொடுப்பதாக சஜித் பிரேமதாச குற்றம் சுசாட்டியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிர்கதியாகியுள்ளவர்கள் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுத்தவர்கள் என்பதை அரசாங்கம் நினைவில்கொள்ள வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை