பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்று விசேட கலந்துரையாடல்
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இந்த கலந்துரையாடல்களின் போது பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்து கொடுக்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து பாடசாலைகளையும் மார்ச் 13 ஆம் திகதியில் இருந்து மறு அறிவித்தல் அவரை மூட கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
இருப்பினும், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதி குறித்த இன்னும் முடிவு செய்யப்படவில்லை. குறிப்பாக நாட்டில் கொரோனா தொற்று இல்லை என 100 விகிதம் சுகாதார அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை