வன்னி புதிய கட்டளைத்தளபதி வவுனியா அரசாங்க அதிபருடன் சந்திப்பு
வன்னி புதிய கட்டளைத்தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயசிறி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினார்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்ற வன்னி கட்டளைத் தளபதிக்கு மாவட்ட செயலகத்தில் சிங்கள மற்றும் தமிழ் முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அவரை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன வரவேற்றிருந்தார்.
இதனையடுத்து மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்த நிலையில், அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. எனினும் இந்த கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வன்னி கட்டளைத்தளபதி மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் மறுத்ததாக எமத பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை