சிறிகொத்தவை கைப்பற்றப்போவதாக சஜித் தரப்பு எச்சரிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிகை விடுத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அஜித் பி.பெரேரா, சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்றும் இது அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமானது அல்ல என்றும் கூறினார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனை அடுத்து சிரிகொத்தாவை ஐக்கிய மக்கள் சக்தியினர் கைப்பற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயம் மூடப்படுகின்றது என்றும் இதன் காரணமாகவே அவ்வாறு செயற்படுகின்றார்கள் என்றும் வெளியான செய்திகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் அஜித் பி.பெரேரா கூறினார்.
“கட்சியின் காரியாலயம் இருக்கும் இடத்தின் உரிமையாளருடன் ஒரு ஒப்பந்தம் உள்ளது, எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கிருந்து தொடர்ந்தும் செயற்படுவோம்” என அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை