கிளிநொச்சியில் கொரோனா சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் விபத்து
கிளிநொச்சி – இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த அம்புலன்ஸ் வண்டி ஏ-9 வீதியால் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் சென்றவேளை, கொடிகாமம் – புத்தூர் சந்தியில் முன்னால் சென்ற டிப்பர் திடீரென திரும்பியபோது அம்புலன்ஸ் வாகனத்துடன் மோதியுள்ளது.
இந்நிலையில், அம்புலன்ஸ் வாகனத்தின் முன் பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. எனினும் அதில் பயணித்தவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வேறு அம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு நோயாளிகள் அதில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை