பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த மனுமீதான விசாரணை செப்டம்பர் வரை ஒத்திவைப்பு
கட்டாய விடுமுறையில் அனுப்பியதற்கு எதிராக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு செப்டம்பர் 09 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு முர்து பெர்னாண்டோ எஸ்.துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய மூவரைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் குறித்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொல்லப்பட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
கருத்துக்களேதுமில்லை