ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி விமான நிலையம் மீள திறக்கத் திட்டம் – ஜனாதிபதியிடம் முன்மொழிவு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயங்கச்செய்வது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாடு வழமைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பாக கொவிட் 19 ஒழிப்பு செயலணி குழு ஜனாதிபதிக்கு அந்த அறிக்கையை முன்வைத்துள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை மீளக்கட்டியமைத்தலுக்கான நடவடிக்கை மற்றும் மற்றும் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கொவிட் 19 ஒழிப்பு செயலணி இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஒன்று கூடிய போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் சமூகப்பரவலிலிருந்து அடையாளம் காணப்படவில்லை எனவும் அந்த செயலணி ஜனாதிபதியிடம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை