வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் விடுதியில் திருட்டு

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் ஆசிரியர் விடுதி உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் – 19 தாக்கம் ஏற்பட்டதையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமையால் செட்டிகுளம் பகுதியில் உள்ள குறித்த பாடசாலையின் விடுதியில் தங்கி நின்று கற்பித்த வெளிமாவட்ட ஆசிரியர்கள் தங்களது இடங்களுக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த ஆசிரியர்களின் விடுதியின் மேற் கூரையை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதுடன், ஏனைய பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமமைவாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.