வவுனியாவிலிருந்து மாகாணங்களுக்கிடையிலான தனியார் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்
வவுனியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சேவைகள் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இன்றையதினம் (26.05) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இ.போ.ச பேரூந்துகள் மட்டுப்படுத்தபட்டு சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டிருந்தன.
இந் நிலையில் இன்றிலிருந்து மாகாணங்களுக்கு இடையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.
அத்துடன், இ.போ.சபை வவுனியா சாலை பேருந்துகள் வடமாகாணத்தின் மாவட்டங்களுக்கிடையில் சேவையில் ஈடுபட்ட போதும் இன்றைய தினம் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை மேற்கொள்ளவில்லை.
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அமைவாக பேரூந்து சேவைகள் இடம்பெறுகின்றன.
பயணம் செய்யும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளை பின் பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை