கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்
கட்டாரில் தங்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவ்வாறு வந்திறங்கிய இலங்கையர்கள் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கட்டாரின் டோகா நகரில் இருந்து நேற்று இலங்கையர்கள் 273 பேரை ஶ்ரீலங்கன் விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குவைத்தில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டவர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த விமானத்தை தற்காலிகமாக இரத்து செய்ததாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்திருந்தார்.
அத்தோடு, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை