இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1319 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 712 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 597 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 137 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில், 127 பேர் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்பதுடன், 10 பேர் கடற்படையினர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
மொத்தமாக 137 பேர் கொரோனா தொற்றுடன் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டநிலையில், இலங்கையில் ஒரேநாளில் அதிக எண்ணிக்கையான கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை