7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (புதன்கிழமை) காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் பாறை வீழ்வு முதலான அபாய நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை