ராஜித சேனாரட்னவிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் இன்று (புதன்கிழமை) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதற்கமைய ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பிணை மனு தொடர்பான தீர்மானம் அன்றைய தினமே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை