ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை காலை 11.45 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்படவுள்ளது.

அதேநேரம் அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நோர்வுட்டில் இடம்பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

திடீர் உடல்நலக் குறைவினால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்றிரவு கொழும்பில் காலமானார். அவரின் பூதவுடல் தற்போது கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையிலிருந்து இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்திற்கு பூதவூடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.