அமரர் ஆறுமுகம் தொண்டமான் விடுதலைப்புலிகள் மீதும் மதிப்பு வைத்து செயல்பட்டவர்! பா.அரியநேத்திரன்.மு.பா.உ,
அமரர் ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களுக்கு மலைபோல் அரணாக இருந்து செயல்பட்டாலும் விடுதலைப்புலிகள்மீதும் மதிப்பு வைத்து செயல்பட்டவர் அவரின் இழப்பு வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கும் பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் குறுப்பிட்டார்.
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு தொடர்பாக அவரின் இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்.
மலையகத்தலைவராக இருந்த சௌமியமூர்த்தி்தொண்டமான் அவர்கள் தந்தை செல்வாவுடன் பல் நெடுங்காலமாக வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்காக குரல் கொடுத்த ஒருவராவார்.
வட்டுக்கோட்டை தீர்மானம் 1976,மே,14ம் திகதி எடுக்கும்போது தந்தை செல்வாவுடன் பக்கபலமாக மலைகமக்களின் அரசியல் தலைவராக இருந்த சௌமிய மூர்த்தி தொண்டமானின் இரத்த வாரிசியாக அவரின் பரம்பரையில் உதித்த ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் மலைகத்தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி எமது வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கும் குரல்கொடுத்த ஒருவராவார்.
தமிழீழவிடுதலைப்புலிகள் எமது மண்ணில் 70, சதவீத நிலப்பரப்பில் நடைமுறை நிர்வாக அரசு செய்த வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொக்கட்டிச்சோலையில் விடுதலைப்புலிகளின் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பிற்காக அவர் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருந்த வேளை நான் 2001,ம் ஆண்டு அவரை கொக்கட்டிச்சோலைக்கு அழைத்துச்சென்று கலந்துரையாடியவரலாறுகள் உண்டு.
அவர் விடுதலைப்புலிகளை மதிப்பு வைத்து உரையாடியதை நான் நேரில் கண்டேன்.
எனக்கு அவரை 2001,ம் ஆண்டு தொடக்கம் தெரியும் அதன்பின்பு 2004, ம் ஆண்டு தொடக்கம் 2015,வரை 11,வருடங்கள் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவருடன் சில விடயங்கள் தொடர்பாக கதைக்கும் சந்தர்பம் கிடைத்தது.
கிளிநொச்சியிலும் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வனுடனும் அங்கு சென்று பல விடயங்களை அவர் அமைச்சராக இருக்கும்போதே கதைத்து வந்தத்தை நான் அறிவேன்.
தற்பொது விடுதலைப்புலிகளின் முள்ளிவாய்க்கால் மௌனத்திற்குப்பின்பு பலர் விடுதலைப்புலிகளின் கடந்த கால செயல்பாடுகளையும் மூடி மறைக்கப்பார்கின்றனர்.
உண்மையில் இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்த ஆறுமுகம் தொண்டமான் உட்பட பலர் விடுதலைப்புலிகளை சந்தித்த வரலாறுகள் உண்டு.
அவரை முதன்முதலாக நான் அவர் அமைச்சராக இருக்கும்போது ஙிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் ஒரு வீட்டுத்திட்டம் அமைக்கும் இடத்தை பார்வை இடுவதற்காக கிரான் சந்தியில் அவருடன் வந்த இராணுவ பொலிஷ்பாதுகாப்பு தரப்புக்களை விட்டுவிட்டு அமைசர் ஆறுமுகம் தொணரடமான் அவரின் வாகனத்தை செலுத்தினார் நான் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு புலிபாய்ந்த கல் வீடமைப்பு திட்ட இடத்தை பார்வையிட்டபின் படுவான்கரை பெருநிலம் ஊடாக கொக்கட்டுச்சோலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளராக அப்ப்போது செயல்பட்ட கருகாலன் மற்றும் விடுதலைப்புலிகளின் தளபதிகள் சிலருடன் சந்திப்புக்களை்நடத்தி அன்று மதியபோசனமும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பில் நானும் ஊடகவியலாளர்களான இரா.உதயகுமார்,ஜீ.நடேசன் போன்றவர்களும் கலந்து கொண்டோம்.
உண்மையில் வடக்கு கிழக்கு மக்களுக்கும் தம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கம் அவருடம் இருந்தது எனினும் அவரை மீறிய இலங்கை ஆட்சியாளர்கள் அவரால் முன்வைத்த வடக்கு கிழக்கில் உள்ள பல திட்டங்களை செய்ய முடியாமல் தடைபோட்ட வரலாறுகளும் இருந்தது என்பது உண்மை.
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களுக்கு மலைபோன்று சக்திவாய்ந்த ஒரு அரசியல் வாதியாக செயல்பட்டாலும் வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கும் முடிந்தவைகளை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கம் அவருக்கு இருந்தது தற்போது நாடாளுமன்றம் கலைப்கப்பட்டு எதிர்வரும் பொதுத்தேர்தலில் வேட்பாளரா வேட்பு மனுவை்தாக்கல் செய்து காபந்து அரசில் அமைச்சராக பணிபுரியும் போது இயற்கை எய்திய செய்தி தாங்கமுடியாத வேதனையை தருகின்றது.
இந்த பிரிவால் துயருறும் அன்னாரின் மனைவி மக்கள் மலையகமக்கள் உறவினர்கள் எல்லோரோடும் இணைந்து எமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கின்றோம் என அவர் மேலும் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை