நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கலவான, இரத்தினபுரி, ஓப்பநாயக்க, பெல்மடுல்ல, பலாங்கொட, நிவித்திகல, எலபாத்த, கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய, தெரணியகல, தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி மாவட்டத்தின் நெலுவ மற்றும் தவளம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குபட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் கொடக்கவெல்ல, கஹவத்த, கொலன்ன ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, கலிகமுவ, கேகாலை, இறம்புக்கனை மற்றும் மாவனெல்ல பகுதிகளுக்கும் முதல்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் முதல்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் நியாகம பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, இங்கிரிய மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் கொட்டபல பகுதிக்குள் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.